சீருடைக்கு அளவு எடுத்த போது 'டச்' மாணவி புகாரில் போக்சோ வழக்கு

மதுரை : மதுரையில் பள்ளி சீருடைக்கு அளவு எடுத்தபோது டெய்லர் 'டச்' செய்ததாக மாணவி அளித்த புகாரில் மூவர் மீது 'போக்சோ' வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மதுரை எம்.கே.புரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் அடுத்தகல்வியாண்டிற்காக சீருடை அளவெடுக்கும் பணி நடந்து வருகிறது.

தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த பாரதி மோகன் 62, அவரது சகோதரி மதுரை எல்லீஸ்நகர் கலாதேவி 60, ஆகியோர் அளவுஎடுத்தனர்.

பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு அளவு எடுத்த போது தன்னை டெய்லர் 'டச்' செய்ததாக ஆசிரியையிடம் கூறினார். இதுகுறித்து பெற்றோரிடமும் அவர் கூற, மகளிர்போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. விசாரணையின்போது டெய்லர் நடவடிக்கை குறித்து உடன் இருந்த பெண், ஆசிரியையிடம் தெரிவித்தும் அவர்கள் கண்டிக்கவில்லை என மாணவி தரப்பில்தெரிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து பாரதிமோகன், கலாதேவி, ஆசிரியை மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தகவல் அறிந்த இந்திய மாணவர் சங்கத்தினர், மாதர் சங்கத்தினர் பள்ளியை முற்றுகையிட்டனர். போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் 15க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Advertisement