மீன் விற்பனை மந்தம்  

நேற்று முன்தினம் அமாவாசை, நேற்று யுகாதி பண்டிகை என்பதால், திருப்பூர், தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில் நேற்று மீன் விற்பனை மந்தமானது. வழக்கமாக, 40 டன் மீன்கள் மதியத்துக்குள் விற்பனையாகும்; நேற்று, 30 டன்னுக்கு குறைவான மீன்களே மதியம் வரை விற்பனையானது.

மீன் விற்பனை மந்தமாக இருந்ததால், வியாபாரிகள் திடீரென மீன் விலையை குறைத்தனர். இருந்த போதும், பத்து டன் மீன்கள் விற்பனையாகாமல் தேக்கமாகின.

Advertisement