பட்டா வழங்கும் இடம்; கலெக்டர் ஆய்வு

ஸ்ரீமுஷ்ணம்; ஸ்ரீமுஷ்ணம் மலைமேடு பகுதியில் பட்டா வழங்க தேர்வான பயனாளிகளின் ஆவணங்களை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார்.
ஸ்ரீமுஷ்ணத்திற்கு நேற்று கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வருகை தந்து மலைமேடு பகுதியில் ஆய்வு செய்தார்.
இங்கு, வசிக்கும் மக்களில் 94 குடும்பங்களுக்கு தமிழக அரசின் இலவச வீட்டுமனைப் பட்டா திட்டத்தின் கீழ் பட்டா வழங்க பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
பட்டா வழங்க தேர்வான பயனாளிகள் குறிப்பிட்ட முகவரியில் நிரந்தரமாக வசிக்கின்றனரா எனவும், பயனாளிகளின் பெயர், முகவரி, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் சரியாக உள்ளதா எனவும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
தாசில்தார் சேகர், பி.டி.ஓ. செந்தில் வேல்முருகன், பேரூராட்சி செயல் அலுவலர் யசோதா, பேரூராட்சி சேர்மன் செல்வி ஆனந்தன், நில அளவர்கள் உடனிருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement