நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!

7

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (மார்ச் 27) சிலர் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் விபரம் பின்வருமாறு:

நேற்றைய போக்சோ




அளவெடுத்த டெய்லர் அட்டூழியம்

மதுரை, எம்.கே.புரம் தனியார் பள்ளியில் சீருடைக்கு அளவெடுக்கும் பணி நடந்து வருகிறது. தேனி மாவட்டம், போடியைச் சேர்ந்த பாரதிமோகன், 62, அவரது சகோதரி மதுரை எல்லீஸ்நகர் கலாதேவி, 60, ஆகியோர் அளவு எடுத்தனர்.



பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு அளவு எடுத்தபோது தன்னை டெய்லர், தவறாக 'டச்' செய்ததாக ஆசிரியையிடம் கூறினார். இதுகுறித்து, பெற்றோரிடமும் அவர் கூற, மகளிர் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது.


விசாரணையின் போது, டெய்லர் நடவடிக்கை குறித்து உடன் இருந்த பெண், ஆசிரியையிடம் தெரிவித்தும் அவர்கள் கண்டிக்கவில்லை என, மாணவி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, பாரதிமோகன், கலாதேவி, ஆசிரியை மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

டிராக்டர் டிரைவருக்கு 'கம்பி'

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த புதுப்பாளையத்தைச் சேர்ந்த டிராக்டர் டிரைவர் பாண்டியன், 28; மதுபோதையில் கடந்த, 24ம் தேதி இரவு, வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த, 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். செங்கம் அனைத்து மகளிர் போலீசார், பாண்டியனை போக்சோவில் கைது செய்தனர்.

7 வயது சிறுவனிடம் 'சில்மிஷம்'


கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டையைச் சேர்ந்த, 7 வயது சிறுவன், இரண்டாம் வகுப்பு படிக்கிறார். இவரை, அதே பகுதியைச் சேர்ந்த, 17 வயது சிறுவன், பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

எடைக்கல் போலீசார், 17 வயது சிறுவனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். தொடர்ந்து சிறுவனை, விழுப்புரம் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சிறுவன், ஏற்கனவே பைக் திருட்டு குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement