அரசு கல்லுாரியில் விருது பெற்ற பேராசிரியருக்கு பாராட்டு விழா

திருபுவனை; புதுச்சேரி கலிதீர்த்தாள்குப்பம் காமராஜர் அரசு கலைக்கல்லுாரியில் என்.சி.சி., மாணவர்களுக்கு சிறந்த பயிற்சிக்கான வீரமாராம் விருதுபெற்ற பேராசிரியர் கதிர்வேலுவிற்கு பாராட்டு விழா நடந்தது.
கலிதீர்த்தாள்குப்பம் காமராஜர் அரசு கலைக்கல்லுாரியின் சுற்றுலாத்துறை தலைவரான பேராசிரியர் கதிர்வேல், கல்லுாரியின் என்.சி.சி., தரைப்படை பிரிவு இடைநிலை அதிகாரியாக (லெப்டினன்ட்) பணியாற்றி வருகிறார்.
என்.சி.சி., மாணவர்களுக்கான இவரது சிறந்த சேவையை பாராட்டி சென்னை ஒய்.எம்.சி.ஏ., அரங்கில் தேசிய மாணவர் படை சார்பில் நடந்த விழாவில் என்.சி.சி., ஆசிரியர்களின் சிறந்த பயிற்சிக்கான வீரமாராயம் விருது வழங்கப்பட்டது.
விருது பெற்ற பேராசிரியர் கதிர்வேலுவிற்கு கலிதீர்த்தாள்குப்பம் காமராஜர் அரசு கலைக்கல்லுாரியில் பாராட்டு விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் கனகவேல் தலைமையேற்று பேராசிரியர் கதிர்வேலுவிற்கு பொன்னாடை அணிவித்து, பதக்கம் வழங்கி வாழ்த்தி பேசினார்.
விழாவில் துறை தவைர்கள், பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், என்.சி.சி., தரைப்படை பிரிவு மாணவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.