எஸ்.எம்.வி., பள்ளி ஆண்டு விழா

புதுச்சேரி : மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் ஒரு பகுதியான எஸ்.எம்.வி., பள்ளி இரண்டாம் ஆண்டு விழா நடந்தது.

9ம் வகுப்பு மாணவி நேஹா வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் தனசேகரன், பொருளாளர் ராஜராஜன், இணை செயலாளர் வேலாயுதம், மணக்குள விநாயகர் அறக்கட்டளை உறுப்பினர்கள் நிலா பிரியதர்ஷினி, கீதா, கவிதா, வைஷ்ணவி, சூர்யகுமார் ஆகியோர் விழாவினை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.

கல்லுாரி இயக்குனர் வெங்கடாசலபதி வாழ்த்துரை வழங்கினார். பள்ளி முதல்வர் அனிதா சாந்தகுமார் ஆண்டறிக்கை வாசித்தார். மேடையில் நடந்த இரண்டாவது நிகழ்வில், விளையாட்டுக்கான ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டது. பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழா ஏற்பாடுகளை ஆஷிக், சுகுணா தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.

பள்ளியின் 9ம் வகுப்பு மாணவர் சிபிச்செல்வன் நன்றி கூறினார்.

Advertisement