கவர்னர் ரம்ஜான் வாழ்த்து 

புதுச்சேரி : கவர்னர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கவர்னர் கைலாஷ்நாதன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி:

புதுச்சேரி மாநிலத்தில் வாழும் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த ரமலான் தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். புனித ரமலான் நோன்பு சமுதாயத்தில் சமத்துவம், சகோதரத்துவ உணர்வு வளரவும், எளிமை, அன்பு ஆகிய பண்புகளோடு அனைவரையும் நேசிக்கவும் வழிகாட்டுகிறது. ரமலான் நோன்பின் பயனாக அனைவருது வாழ்விலும் அமைதியும், மகிழ்ச்சியும் செழிக்க இறைவன் அருள் புரியட்டும் என்று வாழ்த்துகிறேன். சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணன்குமார், எதிர்கட்சித் தலைவர் சிவா, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம், கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன், அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர், முஸ்லீம் முன்னேற்ற கழகத் தலைவர் பங்காரு, அ.தி.மு.க., மாநில துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Advertisement