தேசிய கூடைப்பந்து போட்டி தமிழக அணி 'சாம்பியன்'

சென்னை:இந்திய கூடைப்பந்து கூட்டமைப்பு மற்றும் அசாம் கூடைப்பந்து சங்கம் சார்பில், தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி, அசாம் மாநிலத்தில் சமீபத்தில் நடந்தது. இதில், இருபாலரிலும் நாடு முழுதும் இருந்து, ஏராளமான அணிகள் பங்கேற்றன.

இதில், பெண்களுக்கான இறுதிப் போட்டியில், தமிழகம் மற்றும் கர்நாடக அணிகள் எதிர்கொண்டன. விறுவிறுப்பான இறுதிப்போட்டியில், 76 - 58 என்ற புள்ளிக் கணக்கில், தமிழக அணி வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

மூன்றாம் இடத்திற்கான போட்டியில், டில்லி அணி, 69 - 63 என்ற கணக்கில் கேரளாவை தோற்கடித்தது. தமிழக அணியில் இடம் பெற்ற, ஹரிமா சுந்தரி, தேஜஸ்ரீ இருவரும், நுங்கம்பாக்கம் எம்.ஓ.பி., கல்லுாரி மாணவியர் என்பதும், ஏஞ்சல், ஜீவிதா, கிருத்திகா, அக் ஷரா மற்றும் யுவஸ்ரீ ஆகியோர், கல்லுாளி முன்னாள் மாணவியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement