கோவில்களில் 60,000 ஹனுமான் சாலிசா புத்தகங்கள் விநியோகம்: தென்னாப்ரிக்காவில் பரவசம்

1

ஜோகன்னஸ்பர்க்:தென்னாப்ரிக்காவில் கோவில்களில் 60,000 சிறிய அளவிலான ஹனுமான் சாலிசா புத்தகங்கள் ஹிந்து அமைப்பினர் விநியோகித்தனர்.

தென்னாப்ரிக்காவின் கவுடெங் மாகாணத்தில் உள்ள பல்வேறு கிளப்புகளைச் சேர்ந்த பைக்கர்களால் வழிநடத்தப்படும் எஸ்.ஏ. ஹிந்து அமைப்பின் உறுப்பினர்கள்,பக்தர்களுக்கு 60,000 ஹனுமான் சாலிசா புத்தகங்களை வழங்கினர்.
அத்துடன் மளிகை பொருட்களும் வழங்கினர்.


இது குறித்து எஸ்.ஏ.,ஹிந்து அமைப்பு நிறுவனர் பண்டித லுாசி சிகாபன் கூறியதாவது:

குவாசுலு-நடால் மாகாணங்கள் உள்ளிட்ட அண்டை மாகாணங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.

பக்தர்களுக்கு, 2 டன் மளிகை பொருள்கள் மற்றும் சிறிய அளவிலான
60 ஆயிரம் ஹனுமான் சாலிசா புத்தகங்கள் வழங்கினோம்.

பக்தர்களும் எங்களுடைய முயற்சியை உற்சாகமாக ஆதரித்தனர். இந்த ஆதரவை காண நாங்கள் மிகுந்த பாக்கியம் பெற்றுள்ளோம்.

பக்தர்களின் வாழ்க்கையை மேம்படுத்த உதவிய அனைத்து கோயில்களின் தலைவர்களுக்கும் பக்தர்களுக்கும் நன்றி சொல்ல கடமை பட்டுள்ளோம்.

வரும் காலங்களில் கவுடங் மாகாணங்களில் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் வழங்கப்படும்.

கடந்த ஆகஸ்ட் 24-2024 அன்று ஷெரெனோ பிரிண்டர்ஸ் மற்றும் எலக்ட்ரோ ஆன்லைன் மீடியாவுடன் இணைந்து பக்தி உத்சவத்தின் போது, 10 லட்சம் ஹனுமான் சாலிசா புத்தகங்கள் வழங்கும் முயற்சியை தொடங்கினோம். தற்போது 60 ஆயிரம் புத்தகங்களை வழங்கி உள்ளோம்.

2029 ஆம் ஆண்டுக்குள்10 லட்சம் ஹனுமான் சாலிசா சிறு புத்தகங்களை விநியோகிக்க திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு பண்டித லுாசி சிகாபன் கூறினார்.

Advertisement