போதை மாத்திரை பதுக்கி விற்ற நான்கு பேர் கைது

சென்னை:மெரினா பொது கழிப்பிடம் அருகே, சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த, ஐஸ்ஹவுஸ் டாக்டர் பெசன்ட் சாலையைச் சேர்ந்த கவுஷ்பாஷா, 20 என்பவரை பிடித்து, மெரினா போலீசார் விசாரித்தனர்.

அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். சோதனை செய்தபோது, 225 போதை மாத்திரைகள் வைத்திருந்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

அவர் கொடுத்த தகவலின்படி, ராயப்பேட்டையைச் சேர்ந்த சந்தோஷ், 18 என்பவரை கைது செய்த போலீசார், 305 போதை மாத்திரை, 1.19 லட்சம் ரொக்கம், 1 கத்தி, மொபைல்போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

அதேபோல், ராமாபுரத்தில் போதை மாத்திரை வைத்திருந்த, திருமுடிவாக்கத்தைச் சேர்ந்த அமோஷ், 21, கலைச்செல்வன், 24 ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, 100 போதை மாத்திரை பறிமுதல் செய்தனர்.

Advertisement