சாலை நடுவே கொடி கம்பம் நெடுஞ்சாலை துறை அகற்றுமா?

ஈக்காடு:திருவள்ளூர் - செங்குன்றம் சாலையில் ஈக்காடு ஊராட்சி அமைந்துள்ளது. இந்த கிராமத்தில், பூண்டி - புழல் கிருஷ்ணா கால்வாய் நடுவே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தின் நடுவே, அரசியல் கட்சியினர் கொடி கம்பம் நட்டு, கொடியேற்றி வைத்துள்ளனர்.

மேலும், அப்பகுதிவாசிகள் மற்றும் அரசியல் வாசிகளும், எந்த ஒரு விசேஷம் என்றாலும், இந்த நெடுஞ்சாலை நடுவே விளம்பர பதாகை கட்டி வருகின்றனர்.

இதனால், சாலையில் உள்ள கொடி கம்பம் மற்றும் விளம்பர பதாகைகள் காற்றில் கிழே விழுந்தால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே கடந்து செல்கின்றனர். தற்போது, சாலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடி கம்பங்களை, ஏப்., 21க்குள் அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எனவே, நெடுஞ்சாலை துறையினர் உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தி, சாலை நடுவே அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சியினர் கொடி கம்பம் மற்றும் விளம்பர பதாகையை அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement