நிறம் மாறி மாசடைந்து வரும் நாகராஜகண்டிகை நீரோடை

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி - மாதர்பாக்கம் மாநில நெடுஞ்சாலையில், நாகராஜகண்டிகை கிராம எல்லையில், ஏரிகளுக்கான நீரோடை செல்கிறது. கால்நடை பயன்படுத்தி வரும் இந்த நீரேடை, தற்போது நிறம் மாறி மாசடைந்து வருகிறது.

இந்த நீரோடையின் கரையோரம் ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அதன் கழிவுநீர் நீரோடையில் வெளியேற்றப்படுவதால், தண்ணீர் மாசடைந்து வருவதாக, கிராம வாசிகள் தெரிவிக்கின்றனர்.

மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினர், நீரோடை தண்ணீரை ஆய்வகத்திற்கு அனுப்பி, உரிய கள ஆய்வு மேற்கொண்டு, விதிமீறி செயல்படும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், அடுத்தடுத்த நீர்நிலைகளை மாசடையாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement