பள்ளி மாணவியருக்கு தொந்தரவு சிறுவர்கள் கைது: வாலிபர் 'எஸ்கேப்'

திரு.வி.க.நகர்:புளியந்தோப்பு காவல் மாவட்டத்தைச் சேர்ந்த நபருக்கு 16 மற்றும் 15 வயதில், இரு மகள்கள் உள்ளனர். இவர்கள், பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 படித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் தட்டச்சு பயிற்சி முடித்து, வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த மூன்று வாலிபர்கள், மாணவியர் இருவரிடமும், இன்ஸ்டாகிராம் ஐ.டி., கேட்டு மிரட்டியுள்ளனர். அவர்கள் தர முடியாது எனக்கூறிய நிலையில், 1 அடி நீள கத்தியை காட்டி மிரட்டி சென்றுள்ளனர். மாணவியர் இதுகுறித்து தந்தையிடம் கூற, அவர் திரு.வி.க.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசாரின் விசாரணையில், ரெட்டேரியைச் சேர்ந்த கனிஷ்கர், 19, மற்றும் அவரது 16 மற்றும் 13 வயது நண்பர்கள் என தெரியவந்தது. இதையடுத்து, சிறுவர்கள் இருவரையும் பிடித்து விசாரித்த போலீசார், அவர்களை சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் சேர்த்தனர். தலைமறைவாக உள்ள கனிஷ்கரை தேடி வருகின்றனர்.

Advertisement