பெற்றோர், மாணவர்கள் பேட்டி

தெளிவு கிடைத்தது
என் மகளை பி.சி.ஏ., படிக்க வைக்க முடிவு செய்துள்ளேன். அஸ்வின் பேசிய வார்த்தைகள், அவரது அனுபவங்களை பகிர்ந்து கொண்டது ஆறுதலாகவும், தன்னம்பிக்கையாகவும் இருந்தது. தெளிவு கிடைத்துள்ளது. நீட் மற்றும் ஜே.இ.இ., குறித்த தகவல்கள் பயனுள்ளதாக இருந்தன.
- எஸ்.லட்சுமி, ராஜாஜி நகர்,
பெற்றோர், திருவொற்றியூர்.
விளக்கம் புரிந்தது
சி.ஏ., படிப்பது கடினம் என்று நினைத்தேன். 'வழிகாட்டி' நிகழ்ச்சியில், ராஜேந்திரகுமார் விளக்கியதால் தெளிவு ஏற்பட்டது. என் மகளை சி.ஏ., படிக்க வைக்க முடிவு செய்துள்ளேன். ஆர்வம் இருந்தால் சி.ஏ., படிப்பதும் எளிதுதான் என்பதை புரிந்து கொண்டேன்.
-எஸ் ஸ்ரீதேவி,
பெற்றோர், அம்பத்துார்.
விருப்பம் சரியே
என் மகள் அழைத்ததால், நிகழ்ச்சிக்கு வந்தேன். இங்கு வந்த பின், இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என்ற என் மகளின் விருப்பம் சரியானது என்பதை புரிந்து கொண்டேன். அவள் விருப்பப்படி படிக்க உதவியாக இருப்பேன்.
- எம்.முத்து,
பெற்றோர், திருவொற்றியூர்.
பிளஸ் 2 படிக்கும்போது, சி.ஏ., படிக்கலாம் என்றிருந்தேன். சி.ஏ., படிப்பது சுலபம் அல்ல என, சிலர் கூறினர். 'தினமலர் - வழிகாட்டி' நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், முழு நம்பிக்கை வந்துள்ளது. இங்கு பேசிய ராஜேந்திரகுமார் தெளிவாக விளக்கினார். பி.காம்., படித்துக் கொண்டே சி.ஏ., படிப்பது குறித்து கூறினார். 'ஹார்டு வொர்க்' செய்தால் சுலபமாக வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை அளித்துள்ளது.
- பி.கோபிகா,
பட்டரவாக்கம்
'தினமலர்' நாளிதழின் பதிப்புகளான, 'சிறுவர் மலர், வாரமலர், ஆன்மிக மலர்' ஆகியவற்றை தொடர்ந்து படித்து வருகிறேன். என் முயற்சியில், 11 பேரை இங்கு அழைத்து வந்துள்ளேன். 'வழிகாட்டி' நிகழ்ச்சி அவர்களுக்கும் உபயோகமாக இருந்தது. இன்ஜினியரிங், ஏ.ஐ., குறித்த தகவல்கள் பயனுள்ளதாக இருந்தன. 'தினமலர் - வழிகாட்டி'க்கு நன்றி.
- தனுஸ்ரீ,
திருவொற்றியூர்.
கைக்கடிகாரம் பரிசு
பி.காம்., படித்துக்கொண்டே சி.ஏ., படிக்கலாம் என்பதை தெரிந்து கொண்டேன். இந்நிகழ்ச்சி ஊக்கம் அளிப்பதாக இருந்தது. நானும் என் தோழியும் வந்துள்ளோம். அவருக்கும் இது பயனுள்ளதாக இருந்தது. நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விக்கு சரியான பதில் அளித்து, 'கைக்கடிகாரம்' பரிசு பெற்றது கூடுதல் மகிழ்ச்சி.
- ஆர்.மைஷா,
மண்ணடி.
தன்னம்பிக்கை
பி.டெக்., படிப்பது தான் என் ஆசை. தற்போது, அதுகுறித்த தகவல்களை கூறியது பயன் உள்ளதாக இருந்தது. திறமையை வளர்த்து கொள்ள வேண்டும் என்பது புரிந்தது. பெற்றோருடன் பேசுவதற்கும் நிறைய தகவல்கள் கிடைத்துள்ளன. தன்னம்பிக்கை பிறந்துள்ளது. பெற்றோருடன் பேசி முடிவெடுக்க, இனிய வாய்ப்பாக இந்நிகழ்ச்சி உள்ளது.
- ஸ்ரீபவானி,
ஆவடி.
முதலில், பி.டெக்., படிக்கலாம் என நினைத்தேன். பின், 'கிரிமினாலஜி' படிக்கலாம் என நினைத்தேன். தெளிவாக முடிவெடுக்க முடியாமல் இருந்தேன். தற்போது, 'அக்ரி'யில் ஏ.ஐ., தொழில்நுட்பம் படிக்கலாம் என 'வழிகாட்டி' நிகழ்ச்சியில் கூறியது ஈர்த்தது. பெற்றோருடன் கலந்து ஆலோசித்து முடிவெடுப்பேன்.
- ஏ.இ.ஹரிஷ்,
பழைய வண்ணாரப்பேட்டை
பிளஸ் 2 படிக்கும்போது, அடுத்து என்ன படிக்க வேண்டும் என்ற சிந்தனை இல்லாமல் இருந்தது. தற்போது, ஏ.ஐ., படிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளது. 'நீங்களும் விஞ்ஞானி ஆகலாம்' என டில்லிபாபு பேசியது, தாக்கத்தை ஏற்படுத்தியது. செயற்கை நுண்ணறிவியல் படிக்க முடிவு செய்துள்ளேன்.
-எம்.தருண்குமார், திருவொற்றியூர்.
சி.ஏ., படிக்க வேண்டும் என்பது கனவு. அதற்கு தயாராகும் வழிமுறைகள் குறித்து, இந்நிகழ்ச்சி விளக்கியது. சி.ஏ., படிப்பதற்கு உதவும் புத்தகங்களை பரிந்துரை செய்தது பயன் உள்ளதாக இருந்தது.
-எஸ்.ஹரிப்பிரியா, அம்பத்துார்.
மேலும்
-
ஜூன் வரை வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
-
விடுதி மாணவர் உணவுப்படியை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை வலியுறுத்தல்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
-
கும்பமேளா புகழ் மோனலிசாவுக்கு நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வழக்கில் கைது
-
ஊட்டி, கொடைக்கானல் வருவோர் கவனிக்கவும்; நாளை முதல் புதிய வாகன கட்டுப்பாடுகள் அமல்
-
கோவில்களில் 60,000 ஹனுமான் சாலிசா புத்தகங்கள் விநியோகம்: தென்னாப்ரிக்காவில் பரவசம்