ஜூன் வரை வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

புதுடில்லி: வரும் ஜூன் மாதம் வரை வழக்கத்தை விட அதிக வெப்பத்தின் தாக்கம் இருக்கும் என்றும், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, உ.பி., குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப அலை வீசலாம் என்றும் இந்திய வானிலை ஆய்வுத்துறை எச்சரித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வுத் துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஏப்ரல் முதல் ஜூன் 2025 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் பல பகுதிகளில் வழக்கத்தை விட அதிக வெப்பநிலை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், குஜராத், பீகார், மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப அலை ஏற்படலாம்.
நாட்டின் மேற்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் வெப்பநிலை இயல்பாக இருக்கும் என்றும் குறைந்தபட்ச தட்பவெப்ப நிலை, பெரும்பாலான மண்டலங்களில் இயல்பைக் காட்டிலும் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக, ஏப்ரல் முதல் ஜூ்ன் வரை 4 முதல் 7 வெப்ப அலை நாட்கள் தான் இருக்கும்.தற்போது, வட மற்றும் கிழக்கு, மத்திய மற்றும் வடமேற்கு இந்தியாவில், வழக்கத்தை காட்டிலும் இரண்டு முதல் நான்கு வெப்ப அலை நாட்கள் கூடுதலாக ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பகல் 11:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை வெளியே செல்வதை குறைக்க வேண்டும். அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
இவ்வாறு இந்திய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
நாடு அதிக எண்ணிக்கையிலான வெப்ப அலை நாட்களை அனுபவிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், இந்த கோடை காலத்தில் 9 முதல் 10 சதவிகிதம் வரையிலான கூடுதல் மின்சார தேவை ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
வாசகர் கருத்து (3)
Saran - pondichery,இந்தியா
31 மார்,2025 - 23:44 Report Abuse

0
0
Reply
Mediagoons - ,இந்தியா
31 மார்,2025 - 20:34 Report Abuse

0
0
Reply
Appa V - Redmond,இந்தியா
31 மார்,2025 - 19:45 Report Abuse

0
0
Reply
மேலும்
-
பார் நோக்கும் பாம்பன் புதிய பாலத்தை கட்டி முடித்ததில் ரயில்வே கண்ட சவால்கள் ஆசியா கண்டம் கண்ட ஆச்சரியம்
-
வரி உயர்வு உடனடியாக அமலுக்கு வரும்; அமெரிக்கா உறுதி!
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
ரூ.15,000 ஊதியம் பெறும் துப்புரவு தொழிலாளி; ரூ.33 கோடி வரி நோட்டீஸ் அனுப்பிய அதிகாரிகள்
-
மாநில நெடுஞ்சாலை ஆணையம் வேண்டாம்...
-
விசைத்தறியாளர் போராட்டம் விவசாயிகள் சங்கம் ஆதரவு
Advertisement
Advertisement