தகராறில் ஈடுபட்ட வாலிபர் கைது

புதுச்சேரி:பொது இடத்தில் தகராறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சேதராப்பட்டு பிப்டிக் தொழிற்பேட்டை அருகே வாலிபர் ஒருவர் நேற்று முன்தினம் அவ்வழியாக செல்லும் பொதுமக்களிடம் தகராறு செய்வதாக சேதராப்பட்டு போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர்.

அதில், சேதராப்பட்டு பழைய காலனி பகுதியை சேர்ந்த பெருமாள், 26, என்பது தெரியவந்து. போலீசார் அவரை கைது செய்தனர்.

Advertisement