ஆக்கிரமிப்பு அகற்றி கொள்ள வியாபாரிகளுக்கு 'நோட்டீஸ்'

அரியாங்குப்பம்: தவளக்குப்பம் அருகே சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கொள்ள வேண்டும் என, பொதுப்பணித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர்.

தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம் முதல் புதுக்குப்பம் கடற்கரை வரை சாலையில், கடைகள் வைத்து ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளன.

அதனால், சுற்றுலா வரும் பயணிகள் வாகனங்களில் செல்ல முடியாமல் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து, பொதுப்பணித்துறை மற்றும் போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

அதனை அடுத்து, பொதுப்பணித்துறை சாலைகள் மற்றும் கட்டடங்கள் தெற்கு கோட்டம் பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்து, அப்பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளனர். காலக்கெடுவுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை எனில், நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிரிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement