இறந்தவர் கண்கள் தானம்

புதுச்சேரி: லாஸ்பேட்டையில் இறந்த முதியவர் கண்கள், அரவிந்த் கண் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.

புதுச்சேரி, லாஸ்பேட்டை, அரசு ஊழியர் குடியிருப்பை சேர்ந்தவர் ராமசாமி, 70. இவர் நேற்று மதியம் 1:00 மணி அளவில் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார்.

இதையடுத்து, அவரது மனைவி செல்வி, மகன்கள் மோகன், ஜெகநாதன், மகள் புவனேஸ்வரி அருண்பிரசாத் மற்றும் குடும்பத்தினர் ராமசாமியின் கண்களை தானம் செய்ய முன்வந்தனர்.

அதன்படி, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி புதுச்சேரி கிளை நிர்வாக குழு உறுப்பினர் அய்யனார் ஏற்பாட்டில், அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர் அபூர்வா தலைமையிலான குழுவினர் இறந்தவரின் கருவிழிகளை தானமாக பெற்றனர்.

அரவிந்த் கண் மருத்துவமனை குழுவினர் , கருவிழிகளை தானம் செய்த குடும்பத்தினர், ஏற்பாடு செய்த இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி புதுச்சேரி கிளை நிர்வாக குழு உறுப்பினர் அய்யனார், ஆயுட்கல உறுப்பினர் கந்தசாமி, ஆறுமுகம், சுகாதார உதவியாளர் ஜவஹர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து, பாராட்டு சான்றிதழ் வழங்கினர்.

Advertisement