போலீசார் முன்னிலையில் தாக்கிகொண்ட வாலிபர்கள்

புதுச்சேரி: முதலியார்பேட்டையில் போலீசார் முன்னிலையில், இரண்டு வாலிபர்கள் தாக்கி கொள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது.

புதுச்சேரி - கடலுார் சாலை வாகன போக்குவரத்து நிறைந்த முக்கிய சாலையாக திகழ்கிறது. நேற்று மதியம் 2:00 மணியளவில் முதலியார்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் அருகே கடை வீதியில் சாலையோரம் தகராறில் ஈடுபட்ட இரண்டு வாலிபர்கள், ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை சமதானம் செய்தனர். இருப்பினும், 2 பேரும் போலீசாரை கூட கண்டுகொள்ளாமல் தாக்கி கொண்டனர்.

பின், போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, இருவரையும் போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்றனர்.

இதனிடையே, போலீசார் முன்னிலையில் வாலிபர்கள் தாக்கி கொள்ளும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement