மாநில அளவில் பேச்சு போட்டி
புதுச்சேரி: இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை நேரு யுவ கேந்திரா சங்கதன் மற்றும் அரசு இணைந்து, மாநில அளவிலான பேச்சு போட்டியை நடத்தின.
புதுச்சேரி சட்டசபை, சபாநாயகர் கூட்ட அரங்கத்தில், வளர்ந்த பாரதம், இளைஞர் பாராளுமன்றம் எனும் தலைப்பில், பேச்சு போட்டி நடந்தது. சபாநாயகர் செல்வம் தலைமை தாங்கினார். நேரு யுவ கேந்திரா துணை இயக்குனர் தெய்வசிகாமணி வரவேற்றார். மாநில இயக்குனர் செந்தில்குமார், தலைவர் சக்திவேல் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், வெங்கடேசன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை செயலர் சுந்தரேசன், நாட்டு நலப்பணி திட்ட மாநில அலுவலர் சதீஷ்குமார் உட்பட கல்லுாரி மாணவர்கள், நேரு யுவ கேந்திரா பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட அளவிலான நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற 10 பேர் உரையாற்றினர். அதில், மூன்று பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, டில்லியில் அடுத்த மாதம் நடைபெற உள்ள தேசிய அளவிலான இளைஞர் பாராளுமன்ற நிகழ்ச்சியில், பங்கேற்க உள்ளதாக துணை இயக்குனர் தெரிவித்தார்.
மேலும்
-
ஜூன் வரை வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
-
விடுதி மாணவர் உணவுப்படியை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை வலியுறுத்தல்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
-
கும்பமேளா புகழ் மோனலிசாவுக்கு நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வழக்கில் கைது
-
ஊட்டி, கொடைக்கானல் வருவோர் கவனிக்கவும்; நாளை முதல் புதிய வாகன கட்டுப்பாடுகள் அமல்
-
கோவில்களில் 60,000 ஹனுமான் சாலிசா புத்தகங்கள் விநியோகம்: தென்னாப்ரிக்காவில் பரவசம்