வெல்டர் தற்கொலை

நெட்டப்பாக்கம்: மடுகரையில் வெல்டர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மடுகரை எம்.ஆர்.எஸ்.நகரைச் சேர்ந்வர் ராஜா, 48; வெல்டர். குடிப்பழக்கம் உள்ள இவர் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதனை குடும்பத்தினர் கண்டித்தனர். இதனால் மனமுடைந்த ராஜா நேற்று அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு, அவரது வீட்டு தோட்டத்தில் உள்ள புலியமரத்தில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரது மனைவி ஆனந்தி புகாரின் பேரில், மடுகரை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குப்புசாமி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

Advertisement