சிறுவர் விருதுகளுக்கு விண்ணப்பம் வரவேற்பு

புதுச்சேரி: இளைஞர் அமைதி மையம் சார்பில், சிறந்த சிறுவர்களுக்கான அரிமதி தென்னகன் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து நிறுவனர் அரிமதி இளம்பரிதி அறிக்கை:

இளைஞர் அமைதி மையம் சார்பில், ஆண்டுதோறும் கலை, இலக்கியம், விளையாட்டு மற்றும் சமூக சேவை ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் சிறுவர்களுக்கு அரிமதி தென்னகன் சாதனை விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தாண்டு விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

புதுச்சேரியை சேர்ந்த 18 வயதிற்கு உட்பட சிறுவர்கள், உரிய ஆவணங்களோடு விண்ணப்பிக்கலாம். பெயர், முகவரி, துறை மற்றும் மொபைல் எண் ஆகிய தகவல்களோடு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 15ம் தேதிக்குள் இளைஞர் அமைதி மையம், 72 முதல் குறுக்குத் தெரு, ஆனந்தரங்கர் நகர், புதுச்சேரி-8 என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தேர்ந்தெடுக்கப்படும் சிறுவர்களுக்கு அரிமரி தென்னகன் 91வது பிறந்த நாளில் விருதுகள் வழங்கப்படும். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.

Advertisement