பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: 8,418 மாணவர்கள் எழுதினர்

புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்காலில் நேற்று நடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 8,418 மாணவர்கள் எழுதினர்.
தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் இயங்கி வரும் தனியார் பள்ளிகளில் நேற்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கியது.
புதுச்சேரி பகுதியில் 20 மற்றும் காரைக்கால் பகுதியில் 6 ஆகிய இடைநிலை மையங்களில் தேர்வு நடந்தது.
தேர்வு பணியில் மைய முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், பறக்கும்படை அலுவலர்கள், நிலையான படை அலுவலர்கள், வழித்தட அலுவலர்கள் மற்றும் அறை கண்காணிப்பாளர்கள் ஆகியோர் ஈடுபடுகின்றனர்.
புதுச்சேரி பகுதியில் நடந்த தேர்வில் 146 தனியார் பள்ளிகளை சேர்ந்த 7,271 மாணவர்கள், 362 தனித்தேர்வர்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் 28 தனியார் பள்ளிகளை சேர்ந்த 1183 மாணவர்கள், 167 தனித்தேர்வகள் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டது.
நேற்று நடந்த தமிழ் மற்றும் இதர மொழிப் பாட தேர்வில் புதுச்சேரியில் 7,246 மாணவர்கள் பங்கேற்றனர். 20 மாணவர்கள் ஆப்சென்டாகினர். 5 மாணவர்களுக்கு தேர்வு எழுத விலக்கு அளிக்கப்பட்டது. இதேபோன்று, 346 தனித்தேர்வர்கள் பங்கேற்றனர்.
16 மாணவர்கள் ஆப்சென்டாகினர். காரைக்காலில் 1172 மாணவர்கள் பங்கேற்றனர். 3 மாணவர்கள் தேர்வு எழுத விலக்கு அளிக்கப்பட்டது. 8 மாணவர்கள் ஆப்சென்டாகினர். இதேபோன்று, 158 தனித்தேர்வர்கள் தேர்வு எழுதினர். ஒருவருக்கு தேர்வு எழுத விலக்கு அளிக்கப்பட்டது. 8 பேர் ஆப்சென்டாகினர்.
தேர்வு துவங்கும் முன் மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கப்பட்டு, 10 நிமிடம் வினாக்களை படிக்கவும், 5 நிமிடங்கள் விடைத்தாளில் தங்களின் விவரங்களை பதிவு செய்து சரிபார்க்கவும் ஒதுக்கப்பட்டது. பின், காலை 10:15 மணிக்கு விடைகள் எழுத மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும்
-
ஜூன் வரை வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
-
விடுதி மாணவர் உணவுப்படியை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை வலியுறுத்தல்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
-
கும்பமேளா புகழ் மோனலிசாவுக்கு நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வழக்கில் கைது
-
ஊட்டி, கொடைக்கானல் வருவோர் கவனிக்கவும்; நாளை முதல் புதிய வாகன கட்டுப்பாடுகள் அமல்
-
கோவில்களில் 60,000 ஹனுமான் சாலிசா புத்தகங்கள் விநியோகம்: தென்னாப்ரிக்காவில் பரவசம்