புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் எக்ஸ்ட்ரூஷன் மையம் திறப்பு

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் புதிய எக்ஸ்ட்ரூஷன் மையம் திறப்பு விழா நடந்தது.
பல்கலைக்கழக துணை வேந்தர் பிரகாஷ் பாபு எக்ஸ்ட்ரூஷன் தொழில் நுட்ப மையத்தை திறந்து வைத்தார்.
அப்போது, மகளிர் தொழில் முனைவோர், விவசாயிகள் மற்றும் வேலை வாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்குவதில், புதுமைகளை ஊக்குவிப்பதில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற சமூகங்களில் நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும்' என்றார்.
பல்கலைக்கழக பதிவாளர் (பொ) ரஜ்நீஷ் பூத்தானி, தொழில்நுட்ப மையத்தின் செயல்பாடுகள் மற்றும் சமூகத்தில் ஏற்படுத்தும் நேர்மறையான தாக்கங்களை விளக்கினார். பேராசிரியர்கள் தரணிக்கரசு, ஜோசப் செல்வின் ஆகியோர் தொழில் முனைவு, மற்றும் இளைஞர் தலைமுறையில் எக்ஸ்ட்ரூஷன் முக்கியத்துவம் குறித்து பேசினர்.
இந்த எக்ஸ்ட்ரூஷன் உபகரணங்கள் பல புதுமையான தயாரிப்புகளை உருவாக்க உதவுகிறது. பல்கலைக்கழகத்தின் இந்த புதிய வசதி, சிறிய அளவிலான உணவு தொழில்முனைவோர் மற்றும் விவசாயிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அவர்களின் உற்பத்தித் திறன் மற்றும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க பெரும் உதவியாக இருக்கும். விழாவில், 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இதில், மாணவர்களின் பல்வேறு புதிய தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.
மேலும்
-
ஜூன் வரை வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
-
விடுதி மாணவர் உணவுப்படியை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை வலியுறுத்தல்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
-
கும்பமேளா புகழ் மோனலிசாவுக்கு நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வழக்கில் கைது
-
ஊட்டி, கொடைக்கானல் வருவோர் கவனிக்கவும்; நாளை முதல் புதிய வாகன கட்டுப்பாடுகள் அமல்
-
கோவில்களில் 60,000 ஹனுமான் சாலிசா புத்தகங்கள் விநியோகம்: தென்னாப்ரிக்காவில் பரவசம்