வேளாண் செயலருடன் விவசாயிகள் சந்திப்பு

புதுச்சேரி: புதுச்சேரி மாநில விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழுவினர், வேளாண்துறை அரசு செயலர் நெடுஞ்செழியனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

மனுவில், புதுச்சேரி மாநிலத்தில் நிலவி வரும் நிலத்தடி நீர் பாதிப்பு மற்றும் நீர்பிடிப்புகளின் தற்போதைய நிலைமை, வருங்காலத்தில் நிலத்தடி நீரை உயர்த்துவதற்கான வழிமுறைகள், ஆற்றுப்படுகை அணைகளை விரிவுப்படுத்துதல் மற்றும் விவசாயிகளுக்கு சோலார் எனர்ஜி மூலம் பம்பு செட் பயன்படுத்தும் முறைகள் உள்ளிட்ட வேளாண்துறை சார்ந்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

மேலும், புதுச்சேரி மாநிலத்தில் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகள் குறித்து, அரசு செயலருடன் கலந்துரையாடினர்.

சந்திப்பின்போது, விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் முருகையன், பொதுச் செயலாளர் ரவி, பொருளாளர் ஜெயராமன், துணைத் தலைவர் பாஸ்கர், துணை செயலாளர்கள் ஆதிமூலம், பழனி, ரங்கநாதன், செயலாளர்கள் அருள், ஜீவானந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement