ஊஞ்சல் உற்சவம்

நெட்டப்பாக்கம்: சொரப்பூர் மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

நெட்டப்பாக்கம் அடுத்த சொரப்பூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அமாவாசை தோறும் ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். அமாவாசையை முன்னிட்டு நேற்று காலை 10:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. மாலை 5.00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Advertisement