பட்டாவில் திருத்தம் செய்ய லஞ்சம் வாங்கிய இளநிலை உதவியாளருக்கு 4 ஆண்டு சிறை

1

ராமநாதபுரம்: கம்ப்யூட்டர் பட்டாவில்புள்ளியை திருத்தம் செய்வதற்கு ரூ.1000 லஞ்சம் பெற்ற வழக்கில்இளநிலை உதவியாளருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து ராமநாதபுரம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ராமநாதபுரம் அருகே சூரன்கோட்டையை சேர்ந்த கணபதி மகன் விஸ்வநாதன் 30. இவரது தாயார் காமாட்சி பெயரில்உள்ள கம்ப்யூட்டர் பட்டாவில் ஒரு புள்ளியை மட்டும் திருத்தம் செய்ய ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் இளநிலை உதவியாளரான முகமதுதிலீப் 47, என்பரை அணுகினார்.

அதற்கு அவர் ரூ.1000 லஞ்சம் கேட்டுள்ளார். இது குறித்து ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் விஸ்வநாதன் புகார் செய்தார். 2015 மார்ச் 18ல் போலீசார் ரசாயனம் தடவிய ஆயிரம்ரூபாயை வழங்கினர். இதனை விஸ்வநாதன் முகமது திலீப்பிடம் கொடுத்த போது கையும் களவுமாக போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் ஜாமினில் வந்தார்.

இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. இதில் முகமது திலீப்புக்கு 4 ஆண்டு சிறை தண்டனை, ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி மோகன்ராம் தீர்ப்பளித்தார்.

அபராதம் கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டார். தற்போது முகமது திலீப் ராமநாதபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

Advertisement