உலக கண்ணொளி தின விழா

புதுச்சேரி: உப்பளம் புனித மத்யாஸ் மேல்நிலைப் பள்ளியில், ஈச் பவுண்டேஷன் தென்னக கண்ணொளி மருத்துவ வல்லுனர்கள் கூட்டமைப்பு சார்பில், உலக கண்ணொளி தின விழா நடந்தது.

பவுண்டஷன் நிறுவனர் தமிழ்வாணன் தலைமை தாங்கினார். விழாவில், டாக்டர்கள் ரூபன், பூபேஷ்குப்தா, தேவேந்திரன், பிரான்ஸ் பெர்டினாண்ட் ஜெகநாதன், செயலர் குமார், பொருளாளர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளுக்கு ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான கண் கண்ணாடிகளை வழங்கினர்.

ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ராஜ், ஆசிரியர்கள், அருட்சகோதரிகள் ஆகியோர் செய்திருந்தனர். மாணவ, மாணவிகளுக்கு கண்ணொளி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Advertisement