எலுமிச்சை விலை உயர்வு; கிலோ ரூ.80க்கு விற்பனை

ஒட்டன்சத்திரம்: சுட்டெரிக்கும் வெயில் காரணமாக தேவை அதிகரித்துள்ளதால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ஒரே நாளில் எலுமிச்சை கிலோவுக்கு ரூ.20 அதிகரித்து ரூ .80க்கு விற்பனையானது.
ஒட்டன்சத்திரம், மலைப்பகுதி கிராமங்களில் எலுமிச்சை அதிகமாக விளைவிக்கப்படுகிறது. சில நாட்களாக தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் விளைந்த எலுமிச்சை வரத்து இங்கு அதிகமாக இருந்தது. இரண்டு நாட்களுக்கு முன் கிலோ எலுமிச்சை ரூ.60க்கு விற்றது.
சுட்டெரிக்கும் வெயில் காரணமாக தேவை அதிகரித்துள்ள நிலையில் வியாபாரிகள் அதிக அளவு கொள்முதல் செய்தனர். இதன் காரணமாக நேற்று முன்தினம் எலுமிச்சை விலை ஒரே நாளில் கிலோவிற்கு ரூ. 20 வரை அதிகரித்து ரூ.80க்கு விற்றது.
விவசாயி மணிகண்டன் கூறியதாவது:
''சில மாதங்களாக எலுமிச்சை கிலோ ரூ.50க்கு குறைவாக விற்றதால் அவற்றை செடிகளில் இருந்து பறிக்கும் கூலிக்கு கூட கட்டுபடியாகாத நிலையில் தவித்து வந்தோம். சுட்டெரிக்கும் வெயில் காரணமாக தேவை அதிகரிக்க வியாபாரிகள் அதிகமாக கொள்முதல் செய்ததால் விலை அதிகரித்துள்ளது'' என்றார்.
மேலும்
-
எம்புரான் படத்தில் முல்லைப்பெரியாறு அணை பற்றி சர்ச்சை கருத்து; தடை விதிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
ஜூன் வரை வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
-
விடுதி மாணவர் உணவுப்படியை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை வலியுறுத்தல்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
-
கும்பமேளா புகழ் மோனலிசாவுக்கு நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வழக்கில் கைது
-
ஊட்டி, கொடைக்கானல் வருவோர் கவனிக்கவும்; நாளை முதல் புதிய வாகன கட்டுப்பாடுகள் அமல்