மும்முனை மின்சாரம்: விவசாயிகள் வலியுறுத்தல்

கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடந்தது.
கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள் பேசிய விவரம் பின்வருமாறு:
சிவசக்திவேல்: செங்கால் ஓடையை துார்வார நிதி ஒதுக்கி சீரமைக்க வேண்டும். வெட்டிவேர் பயிர் சாகுபடிக்கு உரிய வழிகாட்டுதல் வேண்டும்.
முருகானந்தம்: கடல் நீர் உட்புகுவதால், குடிநீர், விவசாயம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. ஆதிவராகநல்லுாரில் தடுப்பணை கட்டித்தர வேண்டும்.
செந்தில்முருகன்: புத்தக கண்காட்சி, கோடைவிழாவைப்போல விவசாயிகள் நலன் கருதி விவசாய கண்காட்சி நடத்த வேண்டும்.
ராமலிங்கம்: விவசாயத்திற்கு முறையான மின்வினியோகம் இல்லாததால் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. குறைந்தபட்சம் 6 மணி நேரம் தொடர்ந்து மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கலெக்டர் சிபிஆதித்யா செந்தில்குமார், விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். கூட்டத்தில் டி.ஆர்.ஓ.,ராஜசேகரன் உட்பட அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
மேலும்
-
எம்புரான் படத்தில் முல்லைப்பெரியாறு அணை பற்றி சர்ச்சை கருத்து; தடை விதிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
ஜூன் வரை வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
-
விடுதி மாணவர் உணவுப்படியை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை வலியுறுத்தல்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
-
கும்பமேளா புகழ் மோனலிசாவுக்கு நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வழக்கில் கைது
-
ஊட்டி, கொடைக்கானல் வருவோர் கவனிக்கவும்; நாளை முதல் புதிய வாகன கட்டுப்பாடுகள் அமல்