லைலத்துல் கதர் சிறப்பு தொழுகை

அவலுார்பேட்டை: அவலுார்பேட்டை மசூதியில் லைலத்துல் கதர் இரவு சிறப்பு தொழுகை நடந்தது.

ரம்ஜான் மாதத்தில் கடைசி ஒற்றைப்படை தினங்களில் வரும் லைலத்துல் கதர் எனும் கண்ணியத்திற்குரிய இரவானது ஆயிரம் மாதங்களுக்கும் மேலாக தொழுத நன்மைகள் வழங்கும் புனித இரவாக கருதப்படுகிறது.

அதனையொட்டி, அவலுார்பேட்டை மசூதியில் நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு 20 ரகாத் சுன்னத்தான தராவீ சிறப்பு தொழுகையும், சொற்பொழிவும் நடந்தது. இதில் ஜமாத்தினர் பங்கேற்றனர்.

Advertisement