திடக்கழிவு மேலாண்மை திட்டம் பேரூராட்சி மன்றத்தில் தீர்மானம்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி பேரூராட்சி கூட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை செயலாக்க திட்டத்தை விரைந்து செயல்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விக்கிரவாண்டியில் பேரூராட்சி கூட்டத்திற்கு சேர்மன் அப்துல் சலாம் தலைமை தாங்கினார். துணை சேர்மன் பாலாஜி, செயல்அலுவலர் ேஷக் லத்தீப் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் ராஜேஷ் வரவேற்று தீர்மானங்களை படித்தார்.கூட்டத்தில் விக்கிரவாண்டியில் திடக்கழிவு மேலாண்மை செயலாக்க திட்டத்திற்கு ஒப்பந்தாரரை உறுதி செய்து திட்டத்தை விரைந்து செயல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நியமன குழு உறுப்பினர் சர்க்கார் பாபு மற்றும் அனைத்து வார்டு கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.

Advertisement