பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகளுக்கான பாலியல் வன்கொடுமை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

கல்யாணம்பூண்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் ராஜன் தலைமை தாங்கி பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாணவிகள் மற்றும் பொதுமக்களிடம் வழங்கி பேசினார்.

பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமநாதன், மேலாண்மைக் குழு அமிர்தம் கோதண்டபாணி, ஆசிரியர்கள் தென்றல், ராஜா, பெற்றோர் ஆசிரியர் குழு சுரேஷ், ராஜேந்திரன், கார்த்திகேயன் பங்கேற்றனர்.

Advertisement