பா.ம.க., ஒன்றிய கலந்தாய்வுக் கூட்டம்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தெற்கு ஒன்றிய பா.ம.க., கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.

சிந்தாமணி கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, தேர்தல் பணிக்குழு தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் மணிமாறன் முன்னிலை வகித்தார். தெற்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல் வரவேற்றார்.

கூட்டத்தில், வரும் மே 11ம் தேதி, மாமல்லபுரத்தில் நடக்கும் சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் விழாவில் பங்கேற்பது குறித்து ஆலோசனை நடந்தது.

ஒன்றிய தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணைத் தலைவர் தண்டபாணி, செயற்குழு உறுப்பினர்கள் தட்சணாமூர்த்தி, தீனாவேலு, மாவட்ட மகளிர் அணி தலைவி புவனேஸ்வரி, வன்னியர் சங்க ஒன்றிய செயலாளர் சபாபதி ஒன்றிய தலைவர் ராம் சுந்தர், துணைத் தலைவர் அய்யப்பன், துணைச் செயலாளர் அய்யனார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Advertisement