டிராக்டர் கவிழ்ந்து விபத்து ஒருவர் படுகாயம்

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் படுகாயம் அடைந்தார்.

சங்கராபுரம் அடுத்த மஞ்சபுத்துாரை சேர்ந்தவர் மணிகண்டன், 30; இவர் மைலம் பாறையில் 'ஹாலோபிளாக்' கற்களை விற்பனை செய்து வருகிறார்.

நேற்று மதியம் 12:00 மணிக்கு, வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்ய, கற்களை ஏற்றிக்கொண்டு, டிராக்டரை ஓட்டி சென்றார். மேடான பகுதியில் சென்ற போது, திடீரென டிராக்டர் கவிழ்ந்தது.

இதைப்பார்த்த அப்பகுதி மக்கள், 'பொக்லைன்' உதவியுடன் டிராக்டரை துாக்கி இடிபாடுகளில் சிக்கிக்கிடந்த மணிகண்டனை மீட்டு, உடனடியாக சங்கராபுரம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு பலத்த காயமடைந்தவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சங்கராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement