தமிழ் மன்ற விழா

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அரசு கலை அறிவியல் கல்லுாரியில் தமிழ் மன்ற விழா நடந்தது. முதல்வர் மணிகண்டன் தலைமை தாங்கினார்.

துறைத்தலைவர் குப்புசாமி முன்னிலை வகித்தார். ஜெகநாதன் வரவேற்றார். சொற்பொழிவாளர் தீர்த்த ஏழுமலை பேசினார். போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுத்தொகை, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பேராசிரியர்கள் சண்முகம், செல்வராஜ், சுகாசினி, கரிமுன் நிஷா, தரண்யா, முகேஷ் கலந்து கொண்டனர்.

மாணவி அந்தோணி டெலிபினா நன்றி கூறினார்.

Advertisement