வேலம்மாள் நர்சிங் கல்லுாரி கருத்தரங்கு

மதுரை: மதுரை வேலம்மாள் நர்சிங் கல்லுாரியில் 'இதயங்களையும் மனதையும் இணைப்போம்; செவிலியர் பராமரிப்பில் தகவல்தொடர்புகளை மேம்படுத்துதல்' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.

செவிலியர்களிடையே தகவல் தொடர்பு திறன்களை மேம்படுத்துதல், நம்பிக்கையை வளர்த்தல், நோயாளிகளின் திருப்தியை மேம்படுத்துதல் அடிப்படையில் நடந்த இக்கருத்தரங்கில் முதல்வர் ரேவதி வரவேற்றார்.

வேலம்மாள் கல்வி அறக்கட்டளை தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்து பேசுகையில், 'நம்பிக்கையை வளர்ப்பதற்கும், மருத்துவப் பிழைகளை குறைப்பதற்கும், நோயாளிகளின் உடல் நலனை மேம்படுத்துவதற்கும் தகவல்தொடர்பு முக்கியமானது' என்றார்.

பேராசிரியர்கள் உமாதேவி, அனிதா டேவிட், செல்வப்ரியா, இளங்கோ சாமுவேல் பீட்டர், டாக்டர் ஷபேராபானு, செல்லப்பாண்டி ஆகியோர் பேசினர். மாநில அளவில் 520க்கும் மேற்பட்ட செவிலியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். துணை முதல்வர் ஆர்.கே. ரதி நன்றி கூறினார்.

Advertisement