பழுதடைந்த ரேஷன் கடை கட்டடம்

அலங்காநல்லுார்: மதுரை வடக்கு தாலுகாவயலுார் ஊராட்சி பிள்ளையார்நத்தத்தில் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டடத்தில் பழுதடைந்து விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த கடையில் உள்ள 2 அறைகளில் ஒன்றில் ஏற்பட்டுள்ள விரிசல்களில் குருவிகள் கூடு கட்டி வாழ்கிறது. மழைக்காலங்களில் மழை நீர் புகுந்து உணவுப் பொருட்கள் வீணாகின்றன. ரேஷன் பொருட்கள் வாங்க வருவோர் நிற்கும் பகுதி, முன்பக்க சிலாப் கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து விழுகின்றன. இக்கட்டடம் மிகவும் சேதமடைந்து வருவதால் பொருட்கள் வாங்க வருவோரின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே இக்கட்டடத்தை இடித்து விட்டு புதிய கடை கட்ட வேண்டும் என கிராமத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எம்புரான் படத்தில் முல்லைப்பெரியாறு அணை பற்றி சர்ச்சை கருத்து; தடை விதிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
ஜூன் வரை வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
-
விடுதி மாணவர் உணவுப்படியை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை வலியுறுத்தல்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
-
கும்பமேளா புகழ் மோனலிசாவுக்கு நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வழக்கில் கைது
-
ஊட்டி, கொடைக்கானல் வருவோர் கவனிக்கவும்; நாளை முதல் புதிய வாகன கட்டுப்பாடுகள் அமல்
Advertisement
Advertisement