முத்துமாரியம்மன் கோயில் விழா

மேலுார்: மில்கேட் முத்து மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு மார்ச் 20 முதல் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர்.

நேற்று கோயிலில் விளக்கு பூஜை நடந்தது. பிறகு சாலக்கரையான் ஊருணியிலிருந்து பூஜாரி தலைமையில் கரகம் எடுத்து கோயிலுக்கு கொண்டு சென்றனர். பக்தர்கள் தீச்சட்டி எடுத்து நேர்த்திகடன் செலுத்தினர்.

Advertisement