இன்று இனிதாக பெங்களூரு

ஆன்மிகம்

சண்டி மஹா யாகம்

 புதுக்கோட்டை ஸ்ரீசுயம் பிரகாச அவதுாத சதாசிவ அறக்கட்டளையுடன் புவனேஸ்வரி பக்த மண்டலி இணைந்து நடத்தும் ஸ்ரீ மங்கள சண்டி மஹா யாகம் - நேரம்: மாலை 4:30 முதல் இரவு 8:00 மணி வரை. மேலும் தகவலுக்கு 94480 94929. இடம்: மகான் ஒடுக்கத்துார் சுவாமிகள் மடம், கங்காதர செட்டி சாலை, ஹலசூரு.

சனி பெயர்ச்சி பூஜை

 சனி பெயர்ச்சியை ஒட்டி சங்கல்பம், கணபதி பூஜை, கலச ஸ்தாபனம், சனி பெயர்ச்சி பூஜை, சனி சாந்தி ஹோமம், பூர்ணஹுதி - காலை 8:30 மணி முதல் மதியம் 12:00 மணி வரை - மஹா மங்களாரத்தி - மதியம் 12:30 மணி. இடம்: தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி சதுக்கம், சிவாஜிநகர்.

 பூஜைகள் ஆரம்பம் - காலை 8:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை; சிறப்பு அபிஷேகம், புஷ்ப அலங்காரம், மஹா மங்களாரத்தி - மதியம் 1:00 மணி. இடம்: ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவில் டிரஸ்ட், நாராயணபிள்ளை தெரு, சிவாஜிநகர்.

 கும்பத்தில் இருந்து மீன ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சியை ஒட்டி, சனி பெயர்ச்சி பூஜை. - காலை 9:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை பக்தர்கள் எள் எண்ணெயால் அபிஷேகம் - மாலை 5:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை சனீஸ்வரருக்கு அபிஷேகம் - மாலை 6:30 மணி - கணபதி பிரார்த்தனை, கலச பிரதிஷ்டை, ஸ்ரீ சனி சாந்தி ஹோமம், நவகிரஹ ஹோமம், பூரணஹுதி, மஹாமங்களராத்தி - இரவு 8:30 மணி மஹா அபிஷேகம் - இரவு 9:40 மணி மஹா மங்களராத்தி, பக்தர்களுக்கு பிரசாதம் வினியோகம். இடம்: ஸ்ரீரேணுகா துர்கா பரமேஸ்வரி கோவில், வீரபிள்ளை தெரு, சிவன்ஷெட்டி கார்டன்.

 சிறப்பு பூஜை, மிருத்யுஞ்ஜெய ஹோமம் - காலை 9:30 மணி. இடம்: ஸ்ரீ கல்யாண லட்சுமி வெங்கடரமணசுவாமி கோவில், உதயகிரி, மைசூரு.

அமாவாசை பூஜை

 அமாவாசை பூஜையை ஒட்டி சிறப்பு அபிஷேகம் - காலை 4:00 மணி; புஷ்ப அலங்காரம் - காலை 8:00 மணி; மஹா மங்களாரத்தி - காலை 9:00 மணி; - பம்பை மற்றும் பக்தி பாடல்கள் - காலை 11:00 மணி. இடம்: ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவில் டிரஸ்ட், நாராயணபிள்ளை தெரு, சிவாஜிநகர்.

 அமாவாசையை முன்னிட்டு துர்கா ஹோமம் மற்றும் துர்கா நமஸ்காரம்; கணபதி, நவகிரஹ, நட்சத்திர, சுப்பிரமணியர், தன்வந்திரி, மன்யு சூக்த ஹோமங்கள் - காலை 9:00 மணி முதல். இடம்: ஓம் ஸ்ரீ கங்கம்மா தேவி கோவில், 2 வது கோவில் தெரு, மல்லேஸ்வரம்.

பொது

திட்ட கண்காட்சி

 வித்யாவர்த்தக கல்லுாரியில் மின் மற்றும் மின்னணு துறை சார்பில் ஒரு நாள் நடக்கும் மாநில அளவிலான திட்ட கண்காட்சி - காலை 9:30 மணி. இடம்: மைசூரு.

 அல்லம்பிரபு ஜெயந்தி மற்றும் பசவலிங்க சுவாமியின் 74 வது மஹா உற்சவம். பா.ஜ., - எம்.எல்.ஏ., ஸ்ரீவத்சவா பங்கேற்பு - காலை 10:30 மணி. இடம்: ஸ்ரீ ஒச மடம், மைசூரு.

 ஷாப்பிங் திருவிழா - காலை 10:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: பழைய கலெக்டர் அலுவலகம், மைசூரு.

பயிற்சி

 ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி. இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

 களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

 ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை. இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.

 சமையல் பயிற்சி - மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.

 எம்பிராய்டிங் பயிற்சி - மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பேட், காவேரி காலனி, கோரமங்களா.

காமெடி

 கெல்ட் ஸ்டாண்ட் அப் காமெடி - மாலை 6:00 முதல் 10:00 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு, தீனா காம்பிளக்ஸ், முதல் தளம், பிரிகேட் சாலை.

 ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, திஷா, 15வது குறுக்கு சாலை, 100 அடி சாலை, ஜே.பி., நகர்.

 ஜோக்ஸ் ஆஜ் கல் - நேரம்: இரவு 8:30 முதல் 10:00 மணி வரை. இடம்: தி மேட் பங்கர், 618, பேஸ்மென்ட், இரண்டாவது பிரதான சாலை, இந்திரா நகர்.

 ஸ்டாண்ட் அப் காமெடி - நேரம்: இரவு 11:00 முதல் அதிகாலை 12:10 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 205, பிரிகேட் கார்டென்ஸ், இரண்டாவது தளம், சாந்தாலா நகர்.

 லேட் நைட் காமெடி ஷோ - இரவு 10:15 முதல் 11:30 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1018, வுட்டன் ஸ்டிரீட், 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.

 ஆங்கில ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 9:00 முதல் 10:15 மணி வரை. இடம்: கபே முஸ்ரிஸ், 49, ஒன்பதாவது பிரதான சாலை, முதல் ஸ்டேஜ், இந்திரா நகர்.

Advertisement