கம்பத்தில் ஆக்கிரமிப்பால் குறுகிய தெருக்களால் சிரமம்

கம்பம்: கம்பம் நகரில் பல வீதிகள் ஆக்கிரமிப்பில் சிக்கி குறுகலாகி மக்கள் சிரமம் அடைகின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கம்பம் நகராட்சியில் 33 வார்டுகளில் ஒரு லட்சம் மக்கள் வசிக்கின்றனர். நகரின் பெரும்பாலன தெருக்களில் பக்கவாட்டு பகுதிகள் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளதால் பொதுமக்கள் நந்து செல்ல முடியாத நிலை உள்ளது. மெயின்ரோடு, வேலப்பர் கோயில் வீதி, காந்திஜி வீதி, பார்க் ரோடு, கம்பமெட்டு ரோடுகளில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளது.

இது தவிர தியாகி வெங்கடாச்சலம் தெரு, குட்டியா பிள்ளை தெரு, கொண்டி தொழு தெரு, கிராம சாவடி வீதி, காளவாசல் வீதிகள், பாரதியார் நகர் வீதிகள், ஓடைக்கரை தெரு, நாட்டுக்கல் தெரு, பழைய பஸ் ஸ்டாண்ட் வீதி, மாரியம்மன் கோயில் கிழக்கு வீதி என நகரில் உள்ள பெரும்பாலான தெருக்கள் ஆக்கிரமிப்புகளால் குறுகலாக்கி வருகின்றனர். அகலமான விவேகானந்தர் வீதியே, தற்போது மிக குறுகலாக மாறியுள்ளது.

வாசல் படிகளை ரோட்டில் கட்டுவதும், சன்சைடுகளை இழுத்து கட்டுவதும், கார் மற்றும் டூவிலர் பார்க்கிங் வீதியை ஆக்கிரமித்து அமைத்துள்ளனர். இதனை நகராட்சியின் நகரமைப்பு துறை வேடிக்கை பார்த்து வருகிறது..

வர்த்தக மண்டலம், குடியிருப்பு மண்டலம் என பிரித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நகரமைப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement