நத்தம்--மதுரை தார்சாலை பணி தொடக்கம்

நத்தம்: தினமலர் செய்தி எதிரொலியாக நத்தம் பஸ் ஸ்டாண்டிலிருந்து பள்ளபட்டி நான்கு வழிச்சாலை வரை புதிய தார் சாலை அமைக்கும் பணி தொடங்கியது.

நத்தம் பஸ் ஸ்டாண்டில் இருந்து மதுரை செல்லும் சாலையில் உள்ள பள்ளபட்டி விலக்கு வரை தார்சாலை பள்ளம் மேடாக காட்சியளித்தது.

அவ்வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் சிரமத்தை அனுபவித்து வந்தனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் தார்சாலைகள் அமைக்கும் பணி தொடங்கியது.

Advertisement