பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக ஐ.ப்.எஸ் அதிகாரி நிதி திவாரி நியமனம்: யார் இவர் தெரியுமா?

புதுடில்லி: பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக ஐ.ப்.எஸ் அதிகாரி நிதி திவாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அமைச்சரவையின் நியமனக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட இந்த நியமனம், பணியாளர் மற்றும் பயிற்சித் துறையால் (DoPT) இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
நிதி திவாரி யார்?
* 2014ம் ஆண்டு பேட்ச் ஐ.எப்.எஸ்., அதிகாரியான நிதி திவாரி, தற்போது பிரதமர் அலுவலகத்தில் துணைச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.
* இவர் பிரதமர் மோடியின் லோக்சபா தொகுதியான வாரணாசியின் மஹ்மூர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர்.
* தற்போது பிரதமர் அலுவலகத்தில் துணைச் செயலாளராகப் பணியாற்றுகிறார்.
* திவாரி தனது தற்போதைய பதவியில் இருந்து பிரதமர் அலுவலகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார். அவரது பதவிக்காலம் தற்போதைய நிர்வாகத்தின் காலத்துடன் அல்லது மேலும் உத்தரவுகள் வழங்கப்படும் வரை நீடிக்கும்.
* சிவில் சர்வீசஸ் தேர்வில் 96 வது இடத்தைப் பிடித்த திவாரி, இந்திய வெளியுறவுப் பணியில் சேருவதற்கு முன்பு வாரணாசியில் உதவி ஆணையராகப் பணியாற்றினார்.
* 2022ம் ஆண்டு துணைச் செயலாளராகப் பொறுப்பேற்ற பிறகு, ஜனவரி 6, 2023 முதல் பிரதமர் அலுவலகத்தில் துணைச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.
* பிரதமர் அலுவலகத்தில் பணிபுரிவதற்கு முன்பு, அவர் வெளியுறவு அமைச்சகத்தில் பணியாற்றினார்.
வாசகர் கருத்து (1)
RAM IYER - ,இந்தியா
31 மார்,2025 - 20:26 Report Abuse

0
0
Reply
மேலும்
-
சினிமாவில் நடிப்பது மட்டும் அரசியலுக்கு போதுமானதல்ல: மதுரை ஆதீனம்
-
பார் நோக்கும் பாம்பன் புதிய பாலத்தை கட்டி முடித்ததில் ரயில்வே கண்ட சவால்கள் ஆசியா கண்டம் கண்ட ஆச்சரியம்
-
வரி உயர்வு உடனடியாக அமலுக்கு வரும்; அமெரிக்கா உறுதி!
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
ரூ.15,000 ஊதியம் பெறும் துப்புரவு தொழிலாளி; ரூ.33 கோடி வரி நோட்டீஸ் அனுப்பிய அதிகாரிகள்
-
மாநில நெடுஞ்சாலை ஆணையம் வேண்டாம்...
Advertisement
Advertisement