ஹிந்து ஆதியன் பழங்குடி மக்கள் ஜாதி சான்றிதழ் வழங்க கோரிக்கை

புதுக்கோட்டை: ஹிந்து ஆதியன் பழங்குடி மக்கள், தங்களுக்கு ஜாதி சான்றிதழ் மறுக்கப்படுவதால், மாணவர்களின் கல்வி, வேலை வாய்ப்பு பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், மணல்மேல்குடியில், ஆதியன் நகரில், 100க்கும் மேற்பட்ட ஹிந்து ஆதியன் பழங்குடி சமூக மக்கள் பல ஆண்டுகளாக வசிக்கின்றனர். பூம்பூம் மாடு இவர்களின் குலத்தொழில். மாறி வரும் காலத்தால், பூம்பூம் மாடு தொழில் குறைந்து, வெவ்வேறு தொழிலுக்கு சென்று உள்ளனர்.
இச்சமூக மாணவ - மாணவியர் அதிகம் பேர் பிளஸ் 2 படித்து வரும் நிலையில், இவர்களின் மேற்படிப்பு மற்றும் வேலைக்கு செல்வதற்கான ஜாதி சான்றிதழ் கிடைக்காமல், கல்வியை பாதியில் நிறுத்தும் சூழல் உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தை தவிர்த்து, தஞ்சாவூர் மற்றும் பிற மாவட்டங்களில், இவர்களுக்கு ஆதியன் பழங்குடியினர் என்ற ஜாதி சான்றிதழ் கொடுப்பதாகவும், எங்களுடைய ஜாதி குறித்த ஆதாரம் இருப்பதால், அதை பெற்றுக்கொண்டு ஜாதி சான்றிதழ் வழங்க அதிகாரிகள் ஏன் மறுக்கின்றனர் என்றும் குற்றஞ்சாட்டினர்.
தங்கள் சந்ததியினர் படித்து நல்ல பதவிக்கு வர வேண்டும் என்றும், இதற்கு ஜாதி சான்றிதழ் அவசியமாவதால், முதல்வர் இதில் தனிகவனம் செலுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக ஐ.ப்.எஸ் அதிகாரி நிதி திவாரி நியமனம்: யார் இவர் தெரியுமா?
-
எம்புரான் படத்தில் முல்லைப்பெரியாறு அணை பற்றி சர்ச்சை கருத்து; தடை விதிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
போதை பொருள் வர்த்தகத்திற்கு எதிரான அரசின் இடைவிடாத வேட்டை தொடரும்; உள்துறை அமைச்சர் அமித் ஷா
-
ஜூன் வரை வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
-
விடுதி மாணவர் உணவுப்படியை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை வலியுறுத்தல்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்