காதல் விவகாரத்தில் அடிதடி: மூவர் கைது

பட்டிவீரன்பட்டி: சித்தரேவு பகுதியை சேர்ந்த தனியார் கல்லுாரியில் படித்து வரும் 18 வயது மாணவி, அதே பகுதியை சேர்ந்த அஜித்குமார் 22, இருவரும் காதலித்தனர்.

இவர்களது காதல் விவகாரம் பெண் வீட்டாருக்கு பிடிக்காததால் அஜித் குமார் வீட்டிற்கு சென்ற கவிதாவின் உறவினர்கள் தாக்கியதில் அஜித் குமாரின் தாய் , தம்பி காயமடைந்து வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

பட்டிவீரன்பட்டி போலீசார் நெல்லுரை சேர்ந்த பாண்டி 35, மதுக்குமார் 35 ,நரசிங்க புரத்தைச் சேர்ந்த பட்டி 35, ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement