பற்றாக்குறை 'கணக்கு!' பட்ஜெட்டில் காண்பித்தது மாநகராட்சி; கண்டித்து அ.தி.மு.க.,வெளிநடப்பு

கோவை : கோவை மாநகராட்சியில் நேற்று 2025-26ம் நிதியாண்டுக்கான வரவு - செலவு திட்ட அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்யப்பட்டது. வருவாய் - 4,617.33 கோடி ரூபாய் என கூறியுள்ள போதிலும், 139.83 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்படுமென கணக்கு காட்டியிருக்கிறது. பல்வேறு தலைப்புகளின் கீழ், 200 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
நிதி நிலை அறிக்கையை, வரி விதிப்பு குழு தலைவர் முபஷீரா, தாக்கல் செய்து, வரவு - செலவுகளை பட்டியலிட்டார். பட்ஜெட் மீதான உரையை, மேயர் ரங்கநாயகி நிகழ்த்தினார். மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலை வகித்தார்.
பொது நிதி, குடிநீர் வினியோகம் மற்றும் வடிகால் நிதி, ஆரம்ப கல்வி நிதி என மூன்று கணக்குகள் பராமரிக்கப்படுகின்றன. அதன்படி, மொத்த வருவாய் - 4,617.33 கோடி ரூபாய்; மொத்த செலவினம் - 4,757.16 கோடி ரூபாய்; 139.83 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. பல்வேறு தலைப்புகளின் கீழ், 200 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளின் கவுன்சிலர்கள், பட்ஜெட்டை வரவேற்று பேசினர். அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
அ.தி.மு.க., கவுன்சில் குழு தலைவர் பிரபாகரன் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்த பட்ஜெட், மாநகராட்சி மக்களுக்கு எவ்விதத்திலும் பயன் தராது. சென்றாண்டு, ரூ.3,300 கோடி வருமானம் என்று சொன்னார்கள்.
இந்தாண்டு, ரூ.4,500 கோடி வருமானம் என்று சொல்லியிருக்கிறார்கள். அதில், ரூ.139 கோடி பற்றாக்குறை என்கிறார்கள். கிட்டத்தட்ட ரூ.1,000 கோடி அதிகமாக வருமானம் வந்தும், பற்றாக்குறை காண்பிக்கிறார்கள்.
அடுத்த பட்ஜெட்டிற்கு இவர்கள் இருக்க மாட்டார்கள். கண்டிப்பாக இந்த ஆட்சியும் இருக்காது. விவாதம் செய்வதற்கோ, பாராட்டுவதற்கோ ஒன்றுமில்லை.
மக்கள் மனம் நொந்திருக்கின்றனர். 'ட்ரோன் சர்வே' எடுத்ததை ரத்து செய்வார்கள்; ஒரு சதவீத அபராதத்தை ரத்து செய்வார்கள்; வரி உயர்வை குறைப்பார்கள் என மக்கள் நினைத்தனர். எதுவும் இல்லை; மக்களுக்கு ஏமாற்றமே மிச்சம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
அடுத்த பட்ஜெட்டிற்கு இவர்கள் இருக்க மாட்டார்கள். கண்டிப்பாக இந்த ஆட்சியும் இருக்காது. விவாதம் செய்வதற்கோ, பாராட்டுவதற்கோ ஒன்றுமில்லை. மக்கள் மனம் நொந்திருக்கின்றனர். 'ட்ரோன் சர்வே' எடுத்ததை ரத்து செய்வார்கள்; ஒரு சதவீத அபராதத்தை ரத்து செய்வார்கள்; வரி உயர்வை குறைப்பார்கள் என மக்கள் நினைத்தனர். எதுவும் இல்லை; மக்களுக்கு ஏமாற்றமே மிச்சம்.
மேலும்
-
பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக ஐ.ப்.எஸ் அதிகாரி நிதி திவாரி நியமனம்: யார் இவர் தெரியுமா?
-
எம்புரான் படத்தில் முல்லைப்பெரியாறு அணை பற்றி சர்ச்சை கருத்து; தடை விதிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
போதை பொருள் வர்த்தகத்திற்கு எதிரான அரசின் இடைவிடாத வேட்டை தொடரும்; உள்துறை அமைச்சர் அமித் ஷா
-
ஜூன் வரை வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
-
விடுதி மாணவர் உணவுப்படியை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை வலியுறுத்தல்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்