சிறுமிக்கு பாலியல் தொல்லை தாத்தாவுக்கு போலீஸ் வலை

மேட்டுப்பாளையம் : பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, தாத்தா முறை உறவினர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேட்டுப்பாளையம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 13 வயது பள்ளி சிறுமி. 50 வயது தாத்தா முறை உறவினரான ஒருவர், வீட்டில் சிறுமி தனியாக இருக்கும் போது, அவரிடம் பழகும் விதம் தொடர்பாக அப்பகுதி மக்களுக்கு சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து, நேற்று முன் தினம் சைல்டு ெஹல்ப் லைனுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதன் பேரில், கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரிகள், சிறுமுகை போலீசாருடன் நேரில் சென்று சிறுமியிடம் விசாரித்தனர்.

விசாரணையில், சிறுமி திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார். தாத்தா முறை உறவினர், தன்னை மிரட்டி மூன்று முறை உடலுறவு வைத்துக் கொண்டார் என தெரிவித்தார்.

இதையடுத்து, மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.

போலீசார் வருவதை அறிந்த தாத்தா தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.----

Advertisement