குண்டம் தேர்த்திருவிழா ஆயக்கால் நட்டு பூஜை

அனுப்பர்பாளையம் : பெருமாநல்லுாரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் குண்டம் தேர்த்திருவிழா கடந்த மாதம் 11ம் தேதி கோவில் வளாகத்தில் உள்ள சகுன விநாயகரிடம் உத்தரவு கேட்கும் நிகழ்ச்சியுடன் நடைபெற்று வருகிறது.

நேற்று ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள விநாயகர் தேருக்கும் அதனை தொடர்ந்து, பெரிய தேரான அம்மன் தேருக்கும் சிறப்பு பூஜையை தொடர்ந்து தேர் முகூர்த்தம் மற்றும் ஆயக்கால் நடும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

முன்னதாக கொண்டத்து காளியம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. அறநிலையத்துறை அதிகாரிகள், பக்தர்கள், பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வரும் ஏப்., 2 இரவு கிராம சாந்தி மற்றும் கொடியேற்ற நிகழ்ச்சி, நடக்கிறது. வரும், 8ம் தேதி நேர்த்திக்கடன் செலுத்த பக்தர்கள் குண்டம் இறங்குதல், நிகழ்ச்சியும், மாலை தேரோட்டம் நடக்கிறது.

Advertisement