மனித உரிமை விழிப்புணர்வு கூட்டம்

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் பரமக்குடியில் நடந்தது.

பரமக்குடி டி.எஸ்.பி., சபரிநாதன் தலைமை வகித்தார். பரமக்குடி டவுன் இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் வரவேற்றார். ராமநாதபுரம் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டி.எஸ்.பி., தங்க கிருஷ்ணன், புள்ளியியல் ஆய்வாளர் முருகலிங்கம், ஆதிதிராவிடர் நல கமிட்டி உறுப்பினர் செல்வி பேசினர்.

அப்போது அனைவரும் சாதி, மதம், இனம், மொழி, பொருளாதார வேறுபாடுகளை களைந்து ஒற்றுமை மற்றும் சமூக நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும். சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கையை பின்பற்ற வேண்டும். சமூக நீதி சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்றனர்.

கூட்டத்தில் போலீசார் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். பரமக்குடி தாலுகா இன்ஸ்பெக்டர் காளிராஜன் நன்றி கூறினார்.

Advertisement