தேவிபட்டினம் சக்கர தீர்த்தம் நீரை வெளியேற்ற வலியுறுத்தல்

தேவிபட்டினம்: தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷாண நவக்கிரகம் அமைந்துள்ளது. இதனால் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து கடலில் புனித நீராடிச் செல்கின்றனர்.

நவபாஷாண கடல் நீரில் புனித நீராடும் பக்தர்கள் எதிரே உள்ள சக்கர தீர்த்த குளத்தில் நீராடி செல்வது வழக்கம். இந்நிலையில், சக்கர தீர்த்தகுளத்தின் நீர் மற்றும் கழிவுகள் பல ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படாததால் மாசடைந்துள்ளது.

இதனால்இங்குகுளிக்கும் பக்தர்களபல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நீரை ஆய்வு செய்து சுகாதாரம் காக்கநடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.

Advertisement